அச்சுறுத்தல் இல்லாத நிலையில் 'அணு ஆயுத தாக்குதல் நடத்த மாட்டோம்' என்று வடகொரியா கூறிஉள்ளது.
வடகொரியா, பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும் 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதித்தது.
இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்து கொண்டுள்ளன. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா தொடர்ந்து 5-வது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயார் ஆகி வருவதாக செயற்கைக்கோள் படம் ஒன்றை மேற்கோள்காட்டி அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பியாங்யாங்கில் 36 ஆண்டுகளில் முதல் முறையாக ஆளும் தொழிலாளர் கட்சி மாநாடு நடந்தது. மாநாட்டில் அந்நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன் பேசுகையில், மற்ற நாடுகளால் (தென்கொரியா மற்றும் அமெரிக்கா) வடகொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வரையில் நாங்களாக அணு ஆயுத தாக்குதல் நடத்த மாட்டோம்.
ஆயுதப்பரவலுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின்படி நாங்கள் நடப்போம். உலகளவில் அணு ஆயுதமில்லாத நிலையை ஏற்படுத்த கடுமையாக முயற்சிப்போம். தென்கொரியாவுடனான நம்பிக்கையின்மை, புரிந்துகொள்ளாமை அகற்றப்படவேண்டும். அந்த நாட்டுடனான உறவு வலுப்பட வேண்டும் என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.