திருமணம் முடிந்ததும், புதுமண தம்பதிகள் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப் போட்டனர்.
புதுமண தம்பதிகள்
நேற்று முகூர்த்த நாள் ஆகும். இதனால் சில இடங்களில் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு அளித்தனர்.
சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் ராஜாஜி நகர் மணிமேகலை தெரு விரிவு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 24). தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சுகன்யா (24) என்பவருக்கும் நேற்று மேற்கு மாம்பலத்தில் திருமணம் நடைபெற்றது.
நேற்று மாலை 5 மணிக்கு மனைவியுடன் மணக்கோலத்தில் ராமகிருஷ்ணன் பல்லாவரம் நகராட்சி 8 வார்டு செயிண்ட் மேரிஸ் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டார்.
அவர் கூறுகையில், வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதால் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்த மணக்கோலத்தில் மனைவியுடன் வந்து வாக்களித்தேன் என்றார்.
குமரி மாவட்டத்தில் 4 ஜோடிகள்
குமரி மாவட்டத்தில் 4 ஜோடிகள் திருமண கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். மேல்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு, நேற்று காலையில் திருமணம் முடிந்ததும் மணமக்களான ராஜசிபின் (28), அஜினா பாபு (25) ஆகிய 2 பேரும் ஜோடியாக வந்து வாக்களித்தனர். மணமக்கள் இருவருக்கும் ஒரே வாக்குச்சாவடியில் தான் பெயர் இருந்தது.
இதேபோல் தசரதன் (29), கோமதி (24) ஆகியோர் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் ஜோடியாக வாக்குச்சாவடிக்கு சென்றனர். மணமகன் தசரதன் சுசீந்திரம் கற்காட்டில் உள்ள வாக்குச்சாவடியிலும், மணமகள் கோமதி கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியிலும் தங்களுடைய வாக்கை பதிவு செய்தனர்.
பொதுமக்கள் வியப்பு
தக்கலை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு, மணக்கோலத்தில் கண்ணன், அகிலா ஆகிய 2 பேரும் வந்தனர். அந்த வாக்குச்சாவடியில் அகிலா ஓட்டுப்போட்டார். பிறகு மணமகன் கண்ணன் வாக்களிப்பதற்காக நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். அவருடன் அகிலாவும் சென்றார்.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க மணமக்கள் அய்யப்பன்-ரம்யா ஆகியோர் வந்தனர். அவர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த மணமக்களை பொதுமக்களும், வாக்குச்சாவடி ஊழியர்களும் வியப்புடன் பார்த்து பாராட்டினர்.
பண்ருட்டி
பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டை சேர்ந்த தெய்வக்கண்ணு மகன் ஆனந்தராஜூக்கும்(22), பத்திரக்கோட்டையை சேர்ந்த கஸ்தூரிக்கும் (22) பண்ருட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும், புதுமண தம்பதியினர் மணமகளின் சொந்த ஊரான நெய்வேலி அருகே பத்திரக்கோட்டைக்கு சென்றனர். அங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு வாக்குச்சாவடிக்கு இருவரும் சென்றனர். அங்கு மணமகள் கஸ்தூரி வாக்களித்தார்.
பின்னர் கஸ்தூரி நிருபர்களிடம் கூறும்போது, ‘நெய்வேலி தொகுதியில் உள்ள எனது சொந்த ஊரான இங்கு நான் ஓட்டு போட்டுள்ளேன். எனது கணவருக்கு பண்ருட்டி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த ஊரில் ஓட்டு உள்ளதால் அங்கு அவர் ஓட்டுப்போடுவார் என்றார். அதன்படி மணமக்கள் இருவரும் பிற்பகலில் மாளிகம்பட்டுக்கு சென்றனர். அங்கு மணமகன் ஆனந்தராஜ் வாக்களித்தார்.
என்ஜினீயரிங் பட்டதாரி
கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் நவநீதன் என்பவரின் மகளான முதுகலை என்ஜினீயரிங் பட்டதாரியான பிரதீபாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்தவர் சாத்தூரப்பன் என்பவரின் மகன் சிவசங்கருக்கும் நேற்று கோவில்பட்டியில் திருமணம் நடந்தது. சிவசங்கர் துபாயில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
பிரதீபா கணவருடன் திருமண கோலத்தில் அங்குள்ள அத்தைகொண்டான் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி வாக்குசாவடிக்கு சென்று ஓட்டுப் போட்டார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் 5 திருமண ஜோடிகளும், திருப்பூர் மாவட்டத்தில் 4 ஜோடிகளும் மணக்கோலத்தில் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.