தி.மு.க. தலைவர் கருணாநிதியை நாராயணசாமி சந்தித்து பேசினார். புதுச்சேரி அமைச்சரவையில் தி.மு.க.வுக்கு இடம் அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு நாராயணசாமி பதில் அளித்தார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. மொத்தமுள்ள 30 இடங்களில் காங்கிரஸ் 15 இடங்களிலும், தி.மு.க. 2 இடங்களிலும் என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களிலும் அ.தி.மு.க. 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. சுயேச்சைக்கு ஒரு இடம் கிடைத்தது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி தங்கள் கட்சியின் சட்டசபை தலைவராக முன்னாள் மத்தியமந்திரி நாராயணசாமியை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் புதுச்சேரி மாநில புதிய முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார்.
கருணாநிதியுடன் சந்திப்பு
இந்தநிலையில் நேற்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு நாராயணசாமி சென்றார். அங்கு அவர் கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த சந்திப்பின்போது கனிமொழி எம்.பி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவதற்கான தி.மு.க. ஆதரவு கடிதத்தை நாராயணசாமியிடம் கருணாநிதி வழங்கினார். இதற்கு நாராயணசாமி, கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாழ்த்து
புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கிற வாய்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் முன்மொழிய சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் வைத்திலிங்கம் வழிமொழிய ஏகமனதாக நான் புதுச்சேரி சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் ஆசியோடும், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வாழ்த்துகளுடனும் நான் புதுச்சேரி மாநில முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளேன். இன்றைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து, நன்றி கூறி ஆசி பெற்றுள்ளேன்.
முன்மாதிரி மாநிலம்
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். புதுச்சேரி மாநிலத்தில் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து முன் மாதிரி மாநிலமாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி நடக்கிறது, இருந்தாலும் நாங்கள் புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட்டு நல்ல திட்டங்களை கொண்டு வரவும், வேலைவாய்ப்புகள் வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஏனென்றால் வேலைவாய்ப்பு மிகவும் முக்கியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
நமச்சிவாயத்துக்கு அமைச்சர் பதவியா?
கேள்வி:-புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கிற உரிமையை எப்போது கோரப்போகிறீர்கள்?
பதில்:-இன்றைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கடிதம் பெற்றுள்ளோம். அந்த கடிதத்தை துணை நிலை கவர்னரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் இந்த ஆதரவு கடிதத்தை கவர்னர் உள்துறை மந்திரிக்கு அனுப்பி வைப்பார். அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று பின்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். அதன்பிறகு பதவியேற்பு நடவடிக்கைகளை நாங்கள் தொடங்குவோம்.
கேள்வி:-புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா?
பதில்:-காங்கிரசில் யார்? யாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தான் முடிவு செய்து அறிவிப்பார்.
தி.மு.க.வுக்கு இடமா?
கேள்வி:-உங்கள் கூட்டணியில் தி.மு.க. இருப்பதால் புதுச்சேரி அமைச்சரவையில் தி.மு.க.வுக்கு இடம் அளிப்பீர்களா? அமைச்சர் பதவி வேண்டும் என்று தி.மு.க. கூறியிருக்கிறதா?
பதில்:-இது சம்பந்தமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கலந்து பேசி முடிவு செய்வார்கள்.
கேள்வி:-நீங்கள் எந்த தொகுதியில் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடப்போகிறீர்கள்? தொகுதியை முடிவு செய்து வீட்டீர்களா?
பதில்:-அது சம்பந்தமாக எங்கள் கட்சியும், கூட்டணி கட்சியினரும் கலந்து பேசி முடிவு செய்வோம்.
கேள்வி:-உங்களை சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்கின்ற நேரத்தில் புதுச்சேரியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு, உங்கள் கட்சிக் குள் மோதல் ஏற்பட்டதே?
பதில்:-அந்த பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டது. சில முடிவுகள் எடுக்கும் போது சிறு சிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. எல்லாம் சுமுகமாக முடிந்து விட்டது.
கேள்வி:-எப்போது பதவியேற்க போகிறீர்கள்?
பதில்:-எங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு தேதியை முடிவு செய்வோம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.