மோடி அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழா விளம்பரங்களுக்காக ரூ.1000 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
2 ஆண்டு நிறைவு விழா விளம்பரத்திற்காக மோடி அரசு செலவிட்ட தொகை ரூ.1000 கோடி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதுடெல்லி:
மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் தான் பாரதிய ஜனதா கட்சி வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (26-ந்தேதி) மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றார்.
இன்று பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டை தொடங்கி உள்ளது. இதையொட்டி அரசின் சாதனைகளை விளக்கி டெல்லியில் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது. இது தவிர பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக ஊடகங்கள் மூலம் மத்திய அரசு விளம்பரம் செய்துள்ளது.
இதுபற்றி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்த ஒரு நிகழ்ச்சி தொடர்பான விளம்பரத்திற்காக மோடி அரசாங்கம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், டெல்லி மாநில அரசாங்கம் முழு ஆண்டிற்கும் ரூ.150 கோடிக்கும் குறைவாகவே செலவு செய்துள்ளது’ என்றார்.
ஆம் ஆத்மி அரசாங்கம் பெரிய விளம்பரத்திற்கு அதிக தொகை செலவு செய்வதாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே குற்றம்சாட்டிய நிலையில், கெஜ்ரிவால் தற்போது பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.