Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 28, 2016

எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் உயிரிழப்பு


நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் இறந்துபோனார். அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் உயிரிழப்பு
காத்மாண்டு:

நேபாளத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் மலையேற்ற சீசன் தொடங்கி உள்ள நிலையில், அங்குள்ள 8850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற குழுவினர் ஏறத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மலையேற்ற குழுவினர் சனிக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நெருங்கினர். 8849 மீட்டர் உயரத்தில் உள்ள ஹிலாரி ஸ்டெப்பில் சென்றபோது திடீரென தவறி விழுந்தனர். அவர்களை உடனடியாக ஷெர்பாக்கள் உதவியுடன் தேடும் பணி தொடங்கியது.

அப்போது சுபாஷ் பால் என்பவரை மீட்டு அடிவார முகாமிற்கு கொண்டு வந்து சிகிசிசை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஒருவர் மீட்கப்பட்டார். மேலும் பரேஷ் நாத் (வயது 58) மற்றும் கவுதம் கோஷ் ஆகியோரைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களை ஷெர்பாக்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில், நான்காம் முகாமிற்கு மேற்பகுதியில் பரேஷ் நாத்தின் உடலை ஷெர்பாக்கள் இன்று கண்டுபிடித்துள்ளனர். பின்னர் இரண்டாவது முகாமிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. மற்றொரு வீரரின் உடல் 8000 அடி உயரத்திற்கு மேல் கிடக்கலாம் என கருதப்படுகிறது. அதனை கண்டுபிடித்து மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடும் காற்று வீசுவதால் அங்கு செல்வது கடும் சவாலாக இருப்பதாக ஷெர்பாக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.