பெங்களூருவில் மணிப்பூர் மாநில இளம்பெண்ணை கடத்தி கற்பழிக்க முயன்ற மர்மநபரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ராதிகா (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு கத்திரிகுப்பேயில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து வருகிறார். இங்குள்ள தனியார் நிறுவனத்தில் ராதிகா பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் (ஏப்ரல்) 23–ந் தேதி இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு கத்திரிகுப்பே மெயின் ரோட்டில் ராதிகா வந்து இறங்கினார்.
பின்னர் அவர் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்மநபர் திடீரென்று ராதிகாவை குண்டு கட்டாக தூக்கி கடத்தி சென்றார். பின்னர் அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ராதிகாவை மர்மநபர் கற்பழிக்க முயன்றார்.
தப்பி ஓடினார்
ஆனால் அவர் மர்மநபரின் பிடியில் இருந்து தப்பிக்கவே முயற்சி செய்த வண்ணம் இருந்தார். மேலும் சத்தம் போட்டு ராதிகா கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர் ராதிகாவை அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் ராதிகாவின் வாயை மர்மநபர் தனது கையால் பொத்தினார். உடனே தன்னை காப்பாற்றி கொள்ள மர்மநபரின் கையை பிடித்து ராதிகா கடித்துள்ளார். அதன்பிறகு, மர்மநபரிடம் இருந்து எப்படியோ ராதிகா தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றி சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் செய்ததாகவும், ஆனால் அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராதிகாவை மர்மநபர் கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி செய்யும் காட்சிகள் கத்திரிகுப்பே மெயின் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
கேமராவில் பதிவான காட்சிகள்
அந்த காட்சிகள் நேற்று தனியார் கன்னட தொலைகாட்சிகளில் வெளியானது. அந்த காட்சிகளில் ஏப்ரல் 23–ந் தேதி இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து ராதிகா இறங்குகிறார். பின்னர் அவர் சாலையோரம் நின்று கொண்டிருக்கும் போது பின்னால் வரும் மர்மநபர், அவரை குண்டுகட்டாக அங்கிருந்து தூக்கி செல்கிறார். ராதிகாவை மர்மநபர் தூக்கி செல்வதை அப்பகுதியில் வசிக்கும் சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள்.
மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் ராதிகாவை மர்மநபர் தூக்கி செல்வதை பார்த்து விட்டு, அவரை காப்பாற்ற முயற்சி செல்லாமல் அங்கிருந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் நள்ளிரவில் நடக்கவில்லை. இரவு 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் தான் அரங்கேறி உள்ளது. அத்துடன் இளம்பெண்ணை மர்மநபர் கற்பழிக்க கடத்தி செல்வதும், அவரை காப்பாற்ற யாரும் முன்வராதது போன்ற காட்சிகள் வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்குப்பதிவு
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் என்.எஸ்.மேகரிக் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “இளம்பெண்ணை மர்மநபர் கடத்தி சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம் குறித்து, தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் மஞ்சுநாத் கொடுத்த புகாரின் பேரில் சி.கே.அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம்பெண் எந்த புகாரையும் போலீஸ் நிலையத்தில் கொடுக்கவில்லை. தற்போது மஞ்சுநாத் கொடுத்த புகாரின் பேரிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால், அதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். அப்போது தவறு செய்த போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,“ என்றார்.
மர்மநபர் கைது
இதுபற்றி மாநில மகளிர் ஆணைய தலைவி மஞ்சுளா மானசா கூறுகையில், “இளம்பெண்ணை மர்மநபர் கடத்தி சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம் கண்டனத்திற்கு உரியது. இதில், தொடர்புடைய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அந்த நபருக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மகளிர் ஆணையம் செய்து கொடுக்கும்“ என்றார்.
இதற்கிடையில், தலைமறைவாக உள்ள மர்மநபரை பிடிக்க தெற்கு மண்டல துணை கமிஷனர் லோகேஷ் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபரை வலைவீசி தேடினர். இந்நிலையில் கற்பழிக்க முயற்சி செய்த மர்மநபர் கைது செய்யப்பட்டார்.
துணை போலீஸ் கமிஷனர் லோகேஷ் குமார் பேசுகையில், ”இச்சம்பவம் தொடர்பாக ஒருவனை கைது செய்து உள்ளோம். அவனது பெயர் அக்ஷய். அவனே குற்றவாளி,” என்று கூறிஉள்ளார்.
உதவி செய்ய யாரும் முன்வரவில்லை இளம்பெண் உருக்கம்
பெங்களூரு கத்திரிகுப்பேயில் இளம்பெண்ணை மர்மநபர் கடத்தி சென்று கற்பழிக்க முயன்றார். இதுபற்றி அந்த இளம்பெண் தெரிவிக்கையில், ‘தன்னை மர்மநபர் கடத்தி சென்றபோது, அப்பகுதி வழியாக பொதுமக்கள் பலர் சென்றனர். ஆனால் என்னை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மர்மநபரின் முகம் என் மனதில் பதிந்திருக்கிறது. அவரை மீண்டும் பார்த்தால் அடையாளம் கண்டுபிடித்து விடுவேன்‘ என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.