‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது’ என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் புகார் அளித்தார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்
சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தி.மு.க. 90 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற நிலையில் 100 இடங்களை தாண்டி விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவான சில தேர்தல் அதிகாரிகள், சில காவல் துறை அதிகாரிகள் திடீரென்று சில தொகுதிகளில் வேண்டுமென்றே ஏதோ சில காரணங்களை கூறி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மயிலம், திருவண்ணாமலை, தாம்பரம், பல்லாவரம் உள்பட 20 முதல் 25 தொகுதிகளில் இது போன்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் 35 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். இன்னும் சில ரவுண்டுகள் எண்ண வேண்டியது உள்ளது. இந்த நேரத்தில் ஏதோ காரணங்களை கூறி ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தை நாடுவோம்
இதற்கு முன்பு தேர்தலின்போதே ஆளும் கட்சியின் முறைகேடுகள் குறித்து நான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தொலைபேசி மூலமாகவும், எங்கள் கட்சி வக்கீல் அணி மூலமாகவும் புகார் கொடுத்துள்ளேன். தற்போது வாக்கு எண்ணிக்கையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நேரடியாக வந்து புகார் கொடுத்துள்ளேன்.
உடனே அந்த தவறை சரி செய்து உறுதியான நடவடிக்கை எடுப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். நாங்கள் தேர்தல் கமிஷனை நம்பி புகார் கொடுத்துள்ளோம். இதிலும் நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.
ராதாபுரம்
ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட எங்கள் கட்சி வேட்பாளருக்கு தகுதியான ஓட்டுகளை செல்லாத ஓட்டுகள் என்று கூறி தள்ளுபடி செய்ததை எதிர்த்து சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்ட ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2011–ல் நடந்த கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் அப்போது ஆளும் கட்சியினர் அராஜகம் செய்து ஓட்டு எண்ணும் இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர். அப்போதும் நான் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதுபோன்ற நிலையை ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
திருப்பூர் அருகே ரூ.570 கோடி பிடிபட்டது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம், அப்போது தான் உண்மை நிலை தெரியும். இல்லையென்றால் நாங்கள் வழக்கு தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.