Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 29, 2016

ஐதராபாத் நெடுஞ்சாலையில் இரு லாரிகளுக்கு இடையில் சிக்கி அப்பளமான கார்: திகில் வீடியோ


ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத் - நிஜாமாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வளைவில் வேகமாக வரும் இரு லாரிகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் சிறியரக கார் அப்பளமாக நொறுங்கும் மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஐதராபாத் நெடுஞ்சாலையில் இரு லாரிகளுக்கு இடையில் சிக்கி அப்பளமான கார்: திகில் வீடியோ
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்.

இவரது மகன் ஹர்சவர்த்தன். அதே மாவட்டத்தில் உள்ள வெல்மண் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின். இவரது மகன் லிகிதா (18). மகன் பரத் (15). இவர்கள் 5 பேரும்  கடந்த 25-ந்தேதி ஒரு காரில் ஐதராபாத் சென்று கொண்டு இருந்தனர்.

நிஜமாபாத் அருகே உள்ள கேக்கிரியால் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது. முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல கார் முயன்றது. அப்போது எதிரே இன்னொரு லாரி வேகமாக வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் 2 லாரிக்கு இடையில் கார் சிக்கி நசுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் நசுங்கி பலியானார்கள். அவர்கள் உடல்கள் அடையாளம் தெரியாதபடி சிதைந்தது.

போலீசார் மிகவும் சிரமப்பட்டு உடல்களை மீட்டனர். மகன்களை கல்லூரியில் சேர்க்க ஐதராபாத் சென்ற போது இவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சியை காண..,



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.