அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை எதிர்த்து களம் இறங்கிய இக்கூட்டணியின் தலைவர்கள் வைகோ (ம.தி.மு.க.), தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தை), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூ.), இரா.முத்தரசன் (இந்திய கம்யூ) ஆகியோர் ஆட்சி மாற்றத்தை முன் வைத்து கூட்டணி அமைத்தனர். ஒன்றாக பேட்டியளித்து பரபரப்புபை உண்டாக்கினர்.
அந்த கூட்டணியுடன் தே.மு.தி.க. சேர்ந்ததையடுத்து பெரும் வரவேற்பு ஏற்பட்டது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்தபோதிலும் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் முன் நிறுத்தப்பட்டார்.
விஜயகாந்த் சேர்ந்ததால் மக்கள் நலக்கூட்டணி மேலும் வலுவடைந்தது. பின்னர் இந்த கூட்டணியில் த.மா.கா.வின் ஜி.கே.வாசனும் இணைந்தார். 6 கட்சி தலைவர்கள் சேர்ந்து ‘மெகா’ கூட்டணியை உருவாக்கியதால் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தேர்தலில் அ.தி.மு.க.– தி.மு.க.வை வீழ்த்தும் சக்தியை இக்கூட்டணி அமைந்துள்ளது என்று அரசியல் கணிப்பாளர்கள் கருதினர்.
அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் அரசியலில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் உருவாக்கிய இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் 6 பேரும் மாமண்டூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மட்டுமே ஒன்றாக இணைந்தனர். அதன் பின்னர் விடுதலை சிறுத்தையின் ‘வெளிச்சம்’ டி.வி தொடக்கவிழா நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றனர்.
அதையடுத்து 6 தலைவர்களும் தேர்தல் பிரசார கூட்டங்களில் தனித்தனியாவே பேசி வருகிறார்கள். விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் அவரவர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இவர்களில் விஜயகாந்தும், திருமாளவனும் தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களது சொந்த தொகுதியிலும் பிரசாரம் செய்ய வேண்டியநிலை உள்ளது.
தே.மு.தி.க., மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் தனித்தனியே பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் பிரசார கூட்டங்களில் தொண்டர்களின் கூட்டம் குறைந்தது.
அந்தந்த கட்சி தலைவர்கள் வரும் போது மட்டும் அவரவர் கட்சி தொண்டர்கள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதால் தொடக்கத்தில் இருந்த எழுச்சி படிப்படியாக குறைந்தது.
6 கட்சியின் தலைவர்களும் ஒரு சில தேர்தல் பொதுக் கூட்டங்களில் ஒன்றாக இணைந்து பிரசாரம் செய்திருந்தால் தொண்டர்கள் இடையே உற்சாகமும் உத்வேகமும் ஏற்பட்டு இருக்கும்.
கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்தால் பிரசார முழக்கங்கள், மக்கள் இடையே விரைவாக சென்றடைந்து இருக்கும். கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பேசும் இடங்களில் கூட்டணியின் மற்ற கட்சி தொண்டர்கள் குறைந்த அளவில் பங்கேற்கின்றனர்.
இதனால் தொண்டர்கள் மத்தியில் முன்பு இருந்த வேகம் குறைந்து காணப்படுகிறது. 6 தலைவர்களும் முக்கியமான இடங்களில் ஒன்றாக தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்தி எழுச்சியை ஏற்படுத்தினால் கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்றும் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவருமே நன்கு பேசக்கூடியவர்கள். மக்களிடம் கருத்துக்களை ஆழமாக விதைக்க கூடியவர்கள். அவ்வளவு பேச்சாற்றல், இருந்தும் மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கவில்லை.
தேர்தல் பிரசாரம் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ளன. குறுகிய காலத்தில் அவர்களுடைய பிரசாரம் எந்த அளவிற்கு பயன் அளிக்க போகிறது என்று தெரியவில்லை.
இதுகுறித்து தொல்.திருமாவளவனிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:–
தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. எங்கள் கூட்டணிக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. பெரிய கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் களத்தில் போட்டி போட்டு நின்றாலும் உண்மையில் மக்கள் எங்கள் கூட்டணியைத்தான் விரும்புகிறார்கள். செல்லும் இடமெல்லாம் எழுச்சி காணப்படுகிறது.
புதிய வாக்காளர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. எங்கள் கூட்டணியின் செல்வாக்கு குறைந்து விட்டது என்று சொல்வது முற்றிலும் ஏமாற்று வேலை. மக்கள் அதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள்.
வருகிற 11–ந்தேதி திருச்சியில் சிறப்பு மாநாடு நடக்கிறது. இதில் 6 கட்சி தலைவர்களும் இணைந்து பேசுகிறோம்.
கருத்து கணிப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டு வணிக நோக்கத்தில் வெளியிடப்படுகிறது. இத்தகைய கருத்து திணிப்பு உண்மைக்கு புறம்பானது. எல்லாவற்றையும் தாண்டி எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
கருத்து கணிப்பு பொய்யானவை என்பதற்கு நானே ஒரு சான்று. 2009 பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்ட போது தோல்வி அடைவேன் என்று கருத்து கணிப்பு கூறப்பட்டது. ஆனால் நான் வெற்றி பெற்றேன். 2014 பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்ட போது சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று கருத்து கணிப்பு கூறியது. ஆனால் நான் தோல்வியை தழுவினேன். அதனால் இவற்றையெல்லாம் உண்மையாக ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.