Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

குஷ்பு பிரசாரத்துக்கு காத்திருந்த தி.மு.க. தொண்டர் மயங்கி விழுந்து பலி


காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். குன்றத்தூர், மணிமங்கலம், படப்பை, ஒரகடம், வல்லக்கோட்டை, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படப்பை பகுதியில் அவர் மாலை 6 மணியளவில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக படப்பை பகுதியில் மாலை 5 மணிக்கே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். இவர்கள் மாலை 6.30 மணி வரை காத்து இருந்தனர்.

அப்போது குஷ்பு வருகைக்காக காத்திருந்த தி.மு.க. தொண்டரான கீழ்படப்பை பகுதியைச் சேர்ந்த பூபதி(வயது 55) என்பவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில் நடிகை குஷ்பு ஆலந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து பிரசாரம் செய்து விட்டு குன்றத்தூர் வந்து அங்கிருந்து இரவு 8.30 மணியளவில்தான் மணிமங்கலத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

படப்பையில் தி.மு.க. தொண்டர் மயங்கி விழுந்து இறந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் அங்கு திரண்டிருந்த தொண்டர்களும் கலைந்து செல்ல தொடங்கியதாலும், நேரம் ஆகிவிட்டதாலும் குஷ்பு, படப்பையில் பிரசாரம் செய்யாமல் மணிமங்கலத்தில் இருந்து நேராக சுங்குவார்சத்திரத்தில் பிரசாரம் செய்ய சென்று விட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.