Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

பீகாரில் ஆளும் கட்சி பிரமுகரின் காரை முந்திச்சென்ற வாலிபர் சுட்டுக்கொலை


பீகார் மாநிலம் கயாவில் ஆளும் கட்சி பிரமுகர் காரை முந்திச்சென்ற வாலிபர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.


பீகாரில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி. மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ். ராக்கி யாதவ் நேற்று இரவு தன்னுடைய காரை முந்தி சென்ற காரில் இருந்த வாலிபரை சுட்டு கொன்று உள்ளார். ராக்கியின் தந்தை பிண்டி யாதவை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் மீது ஏற்கனவே பீகாரில் குற்ற வழக்குகள் இருக்கின்றன.  ராக்கி யாதவ், பாதுகாவலருடன் நேற்று இரவு கயாவில் காரில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு கார் முந்திச்சென்று உள்ளது. அப்போது முந்திச்சென்ற காரில் இருந்தவர்களை பிடிக்க பின்தொடர்ந்த ராக்கி வானை நோக்கி  துப்பாக்கியால் சுட்டு உள்ளார்.


இதனை தொடர்ந்து முந்திச்சென்ற காரை மடக்கி அதில் இருந்த ஆதித்யா சச்தேவா என்ற வாலிபரை கடுமையாக தாக்கிஉள்ளார். அவரை சுட்டு கொலை செய்து உள்ளார். இச்சம்பவத்தின் போது ஆதித்யாவுடன் இருந்த வாலிபரும் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான ராக்கியை கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே ராக்கியின் தந்தை பேசுகையில், “காரில் இருந்த பாதுகாவலர் வெளியே வந்ததும், என்னுடைய மகன் பாதுகாப்பிற்காகவே துப்பாக்கியை எடுத்தார், தவறுதலாக இச்சம்பவம் நடைபெற்று விட்டது,” என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.