இந்தோனேசிய நாட்டில் சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை வழங்கும் சட்டத்தை அதிபர் ஜோகோ விடோடா பிறப்பித்துள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் யூஇன் என்ற இடத்தில் சமீபத்தில் 14 வயது பள்ளி சிறுமியை சிலர் கடத்தி சென்று கூட்டாக கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை கொலை செய்தனர். இந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். இதையடுத்து அந்த நாட்டில் சிறுமிகளை கற்பழித்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வந்து உள்ளனர். இதற்கான உத்தரவை அதிபர் ஜோகோ விடோடா பிறப்பித்துள்ளார். இந்த சட்டம் பாராளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வர உள்ளது.
இதற்கு முன்பு அந்த நாட்டில் சிறுமிகளை கற்பழித்தால் அவர்களுக்கு 14 ஆண்டு வரை ஜெயில் தண்டனை வழங்கும் சட்டம் இருந்தது. இப்போது அது மரண தண்டனையாக மாற்றப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.