நடிகரான மோகன்லாலின் அதிகாரபூர்வ இணையதளமான Thecompleteactor.com-ஐ பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கினர். அவரது இணையதளத்தின் முன்பக்கத்தில் பாகிஸ்தான் கொடி படத்தை பதிவேற்றி காஷ்மீரை பிரிப்பதற்கான வாசகங்களையும், இந்தியாவிற்கு எதிரான வாசகங்களையும் குறிப்பிட்டு இருந்தனர். குறிப்பாக, காஷ்மீரில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதாக எச்சரிக்கை செய்யும் செய்தியும் இடம் பெற்றிருந்தது. தகவலறிந்த சில மணிநேரத்திற்குள் மோகன்லாலின் இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய சைபர் செக்யூரிட்டி போர்ஸ் அமைப்பை சார்ந்த ஹேக்கர்கள் பாகிஸ்தானிலுள்ள 100-க்கும் மேற்பட்ட வெப்சைட்டுகளை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோகன்லாலின் இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களது இணையதளங்களை கட்டுக்குள் கொண்டுவந்த இந்திய ஹேக்கர்கள் ’இந்தியாவிடம் மோதினால் இப்படித்தான் நடக்கும் இந்தியாவிடம் மோதாதீர்கள்’ என்ற எச்சரிக்கை வாசகத்தை போஸ்ட் செய்து அவர்களை பீதீயில் ஆழ்த்தியுள்ளனர்.
மேலும், பாகிஸ்தான் இதுபோன்ற சைபர் தாக்குதல்களை நிறுத்தும் வரை இந்தியாவும் இப்படி பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளது இந்தியன் சைபர் செக்யூரிட்டி போர்ஸ்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.