சிங்கப்பூரின் தேசிய புத்தக வளர்ச்சி குழுவும், ஆசிய மேதைமை அமைப்பும் இணைந்து வழங்கும் சபா விருதுக்கு இந்திய பெண் எழுத்தாளர் அதிதி கிருஷ்ணகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்
சிங்கப்பூரின் தேசிய புத்தக வளர்ச்சி குழுவும், ஆசிய மேதைமை அமைப்பும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களுக்கு ‘ஆசிய மேதைமை புத்தக விருது (சபா)’ வழங்கி வருகிறது. இதில் கடந்த ஆண்டுக்கான சபா விருதுக்கு இந்திய பெண் எழுத்தாளரான அதிதி கிருஷ்ணகுமார் எழுதிய ‘சிந்து இழந்த புதையல்’ என்ற கையெழுத்து பிரதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
32 ஆயிரம் வார்த்தைகளை கொண்ட அந்த கையெழுத்து பிரதியில் இந்திய வரலாறு மீதான காதலை ஆசிரியர் வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் அதிதி கிருஷ்ணகுமாருக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம்) பரிசாக வழங்கப்படுகிறது.
இது குறித்து அதிதி கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘வாசிப்பதை எப்போதும் நான் விரும்புவேன். இதன் மூலம் எழுதவும் முடியும் என கருதினேன். ஒரு எழுத்தாளர் ஆவதே எனது லட்சியமாக இருந்தது. இந்த புத்தகம் எழுதுவது மிகவும் சவாலாக இருந்தது. எனினும் அதை நான் சாதித்து விட்டேன்’ என்று தெரிவித்தார்.
இந்தியாவை சேர்ந்த அதிதி கிருஷ்ணகுமார் கடந்த 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.