Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2016

இந்தியாவிலேயே முதல் முறையாக 6 கிலோ 800 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை


இந்தியாவிலேயே கர்நாடகத்தில் முதல்முறையாக தனியார் மருத்துவமனையில் 6 கிலோ 800 கிராம் எடையுடன் கொழு, கொழு குழந்தை பிறந்தது. 

காதல் திருமணம்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா தொட்டிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண். இவரும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பேளூர் டவுனில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நந்தினி கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நந்தினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. 

இதையடுத்து அருண் தனது மனைவியை பேளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை அதிக பருமனாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

பெண் குழந்தை பிறந்தது

அதன்படி நேற்று முன்தினம் இரவு, டாக்டர்கள் நந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 6 கிலோ 800 கிராம் எடையுடன் கொழு, கொழுவென்று இருந்தது. 

இதுகுறித்து நந்தினிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஜெகதீஷ் கூறுகையில், இந்தியாவிலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை இது தான். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியத்தில் 6 கிலோ எடையில் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தை அதிக எடையுடன் இருந்தாலும், நல்ல ஆரோக்கியமாக உள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்றார். 

அதிசய குழந்தை

6 கிலோ 800 கிராம் எடையுடன் கொழு, கொழுவென பிறந்த இந்த அதிசய குழந்தையை உறவினர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் உள்ளவர்களும் ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.