பல ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இந்த 3 நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகள் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
70 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரின் போது கட்டப்பட்ட 73 பாலங்கள் மியான்மரில் தற்போது மீண்டும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பாலங்கள் இந்தியாவை இணைக்கும் நெடுஞ்சாலைகளுடன் தொடர்புடையது. இன்னும் 18 மாதங்களுக்குள் புனரமைப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மியான்மர், இந்தியா நாடுகளுடன் இணையும் வகையில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய பகுதியான மெரேவில் இருந்து மியான்மரின் தமு சிட்டி வரையில் நெடுஞ்சாலைப் போக்குவரத்து திறக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை தாய்லாந்தின் மா சாட் மாவட்டத்தில் உள்ள தாக் வரை சென்றடையும்.
தற்போது இந்த 3 நாடுகளுக்கும் இடையே போடப்பட்டுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து ஒப்பந்தத்தின்படி புனரமைக்கப்படும் பாலங்கள் மற்றும் 1,400 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலையை பயன்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஏற்கனவே, மியான்மரின் தாவேய் ஆழ்கடல் துறைமுக திட்டமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் இந்த துறைமுகத்தை சென்னை மற்றும் தாய்லாந்து லேம் சபாங் துறைமுகத்துடன் இணைக்க இயலும்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இந்திய சுற்றுலா பயணிகள் தாய்லாந்து சென்று வருகின்றனர். இருநாடுகளுக்கும் இடையே சென்ற ஆண்டில் மட்டும் 8 பில்லியன் டாலர்களுக்கு வர்த்தகம் நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.