Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2016

மும்பை, தானேயில் விபசாரம் மாடல் அழகிகள் உள்பட 4 இளம்பெண்கள் மீட்பு பெண் உள்பட 4 தரகர்கள் கைது


மும்பை, தானேயில் கட்டாய விபசாரத்தில் தள்ளப்பட்ட மாடல் அழகிகள் உள்பட 4 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் 4 விபசார தரகர்களை கைது செய்தனர்.

விபசாரம்

மும்பை கோராய் கடற்கரை அருகில் உள்ள பங்களா வீட்டில் மாடல் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி சோதனை செய்தனர்.

அப்போது அங்கு இருந்த விபசார தரகர்கள் 2 இளம்பெண்களை காண்பித்து, அவர்களில் ஒருவருடன் உல்லாசம் அனுபவிக்க ரூ.25 ஆயிரம் தரும்படி போலி வாடிக்கையாளரிடம் பேரம் பேசினர்.

இதனையடுத்து அருகில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் சென்று பணம் எடுத்து வருவதாக கூறி சென்ற, போலி வாடிக்கையாளர் இதுபற்றி ரகசியமாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் அந்த பங்களா வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி, அங்கிருந்த 2 இளம்பெண்களை மீட்டனர்.

கைது

விசாரணையில், இருவரும் மாடல் அழகிகள் என்பது தெரியவந்தது. அவர்களை வைத்து விபசாரம் செய்த தரகர்களான அப்ரோஜ், சலீம் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கோராய் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மீட்கப்பட்ட மாடல் அழகிகள் இருவரும் மும்பை டோங்கிரியில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றொரு சம்பவம்

மற்றொரு சம்பவத்தில் தானே மேற்கு, வர்த்தக்நகர் சத் மங்கள்பாண்டே பகுதியில் பெங்களூவை சேர்ந்த 2 பெண்களை மும்பையில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளிய பெண் விபசார தரகர் ரூபாளி காம்ளே(வயது28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 2 இளம்பெண்களும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.