Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

குடிபோதையில் நடுரோட்டில் போலீஸ்காரர் ரகளை பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் உத்தரவு


குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த போலீஸ்காரரை அதிரடியாக போலீஸ் கமிஷனர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ரோந்து பணி
மும்பை மரோல் போலீஸ் பாதுகாப்பு படை பிரிவில் போலீஸ்காரராக இருந்து வருபவர் பவார் (வயது50). இவர் நேற்று முன்தினம் மால்வாணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது பவார் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. சாலையில் தள்ளாடியபடி வந்த அவர் அங்கிருந்த நடைபாதை வியாபாரிகளிடம் மிரட்டி பணம் வசூல் செய்தார்.

பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கைகளிடமும் மிரட்டி பணத்தை பறித்து உள்ளார். மேலும் அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

சமூக வலைத்தளம்
அத்துடன் நிறுத்தாமல் அங்கு நின்று கொண்டிருந்த கடைக்காரர்களிடம் மதுபானம் வாங்கி வருமாறு கூறி மிரட்டியதுடன், அவர்கள் வாங்கிக்கொடுத்த மதுபானத்தை பொதுமக்கள் முன்னிலையில் குடித்தார். இவர் செய்த அட்டூழியங்களை அங்கு கூடி நின்ற சிலர் தங்கள் செல்போனில் பதிவுசெய்தனர். அவர்களை போலீஸ்காரர் பவார் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.

ஆனால் அதை பொருட்படுத்தாத அவர்கள் தொடர்ந்து அவர் நடுரோட்டில் போடும் ஆட்டங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொண்டே இருந்தார்.

பணியிடை நீக்கம்
வலைதளங்களில் வேகமாக பரவிய இந்த வீடியோ காட்சிகள் 2 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர் பார்வை வரை சென்றுவிட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், போலீஸ்காரர் பவாரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் பவார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மால்வாணி போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.