Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

கென்யாவில் 6 மாடி கட்டிடம் தரைமட்டமான 6 நாட்களுக்கு பிறகு பெண் உயிருடன் மீட்பு


ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடந்த மாதம் 29-ந் தேதி தலைநகர் நைரோபியில் 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீசார், மீட்புபடையினர் என நூற்றுக்கணக்கானோர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களின் அயராத முயற்சியால் விபத்து நேரிட்டு 3 நாட்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கட்டிட இடிபாடுகளில் இருந்து 1½ வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்டிட இடிபாடுகளுக்குள் பெண் ஒருவர் உயிருடன் இருப்பதை மீட்புபடையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து நீண்ட நேர போராட்டத்துக்கு பின் அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் விபத்து நேரிட்ட 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு உள்ளார்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்து உள்ளது. அந்த பெண் உள்பட 137 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.