Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையை 92 ரன்னில் சுருட்டி ஐதராபாத் அணி 6–வது வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 92 ரன்னில் சுருட்டிய ஐதராபாத் அணி 6–வது வெற்றியை ருசித்தது.

37–வது லீக் ஆட்டம்
9–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் நேற்று மாலை விசாகப்பட்டினத்தில் நடந்த 37–வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணியிலும் வீரர்கள் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

டேவிட் வார்னர் 48 ரன்
‘டாஸ்’ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை டிம் சவுதி வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட டேவிட் வார்னர் பவுண்டரி விளாசினார். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

சிறப்பான தொடக்கம் அளித்த டேவிட் வார்னர் 48 ரன்னில் (33 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் பொல்லார்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட கனே வில்லியம்சன் 2 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய யுவராஜ்சிங் அதிரடியாக ஆடினார். மெக்லெனஹான் பந்து வீச்சை அடித்து ஆட முயன்ற யுவராஜ்சிங் (39 ரன்கள், 23 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) பந்துக்கு பதிலாக ஸ்டம்பை பதம் பார்த்ததால் ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்.

ஐதராபாத் அணி வெற்றி
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 57 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 82 ரன்னும், ஹென்ரிக்ஸ் 2 பந்துகளில் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டும், மெக்லெனஹான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் விக்கெட்டுகள் மள, மள வென்று சரிந்தன. 5 ஓவரில் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மும்பை அணி 16.3 ஓவர்களில் 92 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் குறைந்த ரன்னில் வீழ்ந்த அணி மும்பை தான். இதற்கு முன்பு கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 98 ரன்னில் சரிந்ததே ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

ஆட்டநாயகன் நெஹரா
மும்பை அணியில் அதிகபட்சமாக ஹர்பஜன்சிங் ஆட்டம் இழக்காமல் 22 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்தார். குணால் பாண்ட்யா 17 ரன்னும், பொல்லார்ட் 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினார்கள். ஐதராபாத் அணி தரப்பில் நெஹரா, முஸ்தாபிஜூர் ரகுமான் தலா 3 விக்கெட்டும், பரிந்தர் ஸ்ரன் 2 விக்கெட்டும், புவனேஸ்வர்குமார், ஹென்ரிக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

9–வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 6–வது வெற்றி இதுவாகும். 10–வது ஆட்டத்தில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்த 5–வது தோல்வி இது.

ஸ்கோர்போர்டு ஐதராபாத் சன் ரைசர்ஸ்
டேவிட் வார்னர் (சி) பொல்லார்ட் (பி) ஹர்பஜன் 48

ஷிகர்தவான் (நாட்–அவுட்) 82

கனே வில்லியம்சன் (சி) ரோகித் சர்மா (பி) ஹர்பஜன் 2

யுவராஜ்சிங் ஹிட் விக்கெட் (பி) மெக்லெனஹான் 39

ஹென்ரிக்ஸ் (நாட்–அவுட்) 1

எக்ஸ்டிரா 5

மொத்தம் (20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 177

விக்கெட் வீழ்ச்சி: 1–85, 2–91, 3–176.

பந்து வீச்சு விவரம்:

டிம் சவுதி 4–0–35–0

மெக்லெனஹான் 4–0–38–1

ஹர்பஜன் 4–0–29–2

ஜஸ்பிரித் பும்ரா 4–0–35–0

ஹர்திக் பாண்ட்யா 1–0–10–0

பொல்லார்ட் 2–0–23–0

குணால் பாண்ட்யா 1–0–5–0

மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா (பி) நெஹரா 5

பார்த்தீவ் பட்டேல் எல்.பி.டபிள்யூ (பி) புவனேஸ்வர்குமார் 0

அம்பத்தி ராயுடு (சி) வில்லியம்சன் (பி) நெஹரா 6

குணால் பாண்ட்யா (சி) ஷிகர்தவான் (பி) பரிந்தர் ஸ்ரன் 17

ஜோஸ்பட்லர் (சி) நமன் ஓஜா (பி) நெஹரா 2

பொல்லார்ட் (சி) பரிந்தர் ஸ்ரன் (பி) ஹென்ரிக்ஸ் 11

ஹர்திக் பாண்ட்யா (சி) நமன் ஓஜா (பி) முஸ்தாபிஜூர் ரகுமான் 7

ஹர்பஜன்சிங் (நாட்–அவுட்) 21

டிம் சவுதி (சி) நமன் ஓஜா (பி) முஸ்தாபிஜூர் ரகுமான் 3

மெக்லெனஹான் (சி) ஹென்ரிக்ஸ் (பி) முஸ்தாபிஜூர் ரகுமான் 8

ஜஸ்பிரித் பும்ரா (சி) நமன் ஓஜா (பி) பரிந்தர் ஸ்ரன் 6

எக்ஸ்டிரா 6

மொத்தம் (16.3 ஓவர்களில் ஆல்–அவுட்) 92

விக்கெட் வீழ்ச்சி: 1–5, 2–5, 3–28, 4–30, 5–30, 6–49, 7–50, 8–58, 9–78.

பந்து வீச்சு விவரம்:

புவனேஸ்வர்குமார் 3–0–23–1

நெஹரா 3–0–15–3

பரிந்தர் ஸ்ரன் 3.3–0–18–2

ஹென்ரிக்ஸ் 4–0–18–1

முஸ்தாபிஜூர் ரகுமான் 3–0–16–3

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.