Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது; 10-வது ஓவருக்கு பிறகு பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம்; புனே அணி கேப்டன் டோனி கருத்து


10-வது ஓவருக்கு பிறகு பேட்டிங்கில் சரியாக செயல்படாதது தான் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்ததற்கு காரணம் என்று புனே அணி கேப்டன் டோனி தெரிவித்தார்.

புனே அணிக்கு 6-வது தோல்வி

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை தோற்கடித்து 5-வது வெற்றியை ருசித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

முதலில் ஆடிய புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 57 ரன்னும், ஸ்டீவன் சுமித் 45 ரன்னும் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், மெக்லெனஹான், ஹர்பஜன்சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை தனதாக்கியது. கேப்டன் ரோகித் சர்மா 85 ரன்னுடனும், ஜோஸ்பட்லர் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு

வெற்றிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் வெற்றி பெற்றோம். எங்களது பீல்டிங் மோசமாக இருந்தது. சில கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது நல்ல விஷயமல்ல. சிறப்பான தொடக்கம் கண்ட புனே அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய பந்து வீச்சு சிறப்பானதாகும். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். எனது பேட்டிங் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. கடைசி 3 லீக் ஆட்டங்கள் எங்களுக்கு சூப்பராக அமைந்தது. எங்களது பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். ஹர்பஜன்சிங், அம்பத்தி ராயுடு ஆகியோர் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக்கூடியவர்கள். இருவரும் களத்தில் நடந்த பிரச்சினையை அத்துடன் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து புனே அணி கேப்டன் டோனி கருத்து தெரிவிக்கையில், ‘10-வது ஓவருக்கு பிறகு நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. நான் உள்பட பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடவில்லை. இதுபோன்ற ஆடுகளத்தில் நான் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தது அணிக்கு உதவாது. எங்களது பந்து வீச்சில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில விஷயங்களை நாங்கள் மாற்றி கொண்டு வரும் ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.