குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் அடைந்து சென்னையை நெருங்குகிறது.
சென்னைக்கு மிக அருகே...
சென்னை வானிலை மைய ஆராய்ச்சி இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னை அருகே 120 கி.மீ தொலைவில் நிலை கொண்டு உள்ளது.
இது மேலும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை சென்னைக்கு மிக அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 25 செ.மீ வரை கனமழை பெய்யக்கூடும்.
கனமழை பெய்யும்
தமிழகத்தில் வட மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். 50 முதல் 60 கி.மீ வேகத்தில் தரைக்காற்று பலமாக வீசும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களை பொறுத்தமட்டில், ஒரு சில இடங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உண்டு. தென் மாவட்டங்களை பொறுத்தமட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் தொடர் மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யலாம். புயல் கூண்டு எச்சரிக்கை எதுவும் இப்போதைக்கு தேவையில்லை. இன்னும் 24 மணி நேரம் இந்த நிலை நீடிக்கலாம். இன்று மதியத்துக்கு மேல் இந்த நிலை மாறலாம். இது மிகவும் மெதுவாகத்தான் நகர்ந்து வருகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வானிலையில் எந்த மாற்றமும் நிகழலாம். தமிழக கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பக்கமாக அடுத்த 2 தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
14 செ.மீ. மழை
நன்னிலம் 14 செ.மீ., திருவாரூர், செம்பரம்பாக்கம் தலா 12 செ.மீ., சீர்காழி 11 செ.மீ., கடலூர், மயிலாடுதுறை, குடவாசல் தலா 10 செ.மீ., காரைக்கால், சமயபுரம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், அண்ணா பல்கலைக்கழகம், ஆனைக்காரன் சத்திரம், மதுக்கூர் தலா 9 செ.மீ., வேதாரண்யம், நீடாமங்கலம், கொளப்பாக்கம், மன்னார்குடி, வலங்கைமான், திருத்துறைப்பூண்டி தலா 8 செ.மீ., நெய்வேலி, பாண்டவையார்தலை, சேத்தியாதோப்பு, ராமேசுவரம், கேளம்பாக்கம், சத்யபாமா பல்கலைக்கழகம், கந்தர்வக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சென்னை விமானநிலையம், தோகமலை, பட்டுக்கோட்டை, தரமணி, பேராவூரணி, புள்ளம்பாடி, ஆடுதுறை தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.