Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 26, 2016

பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இடம்பெற பி.சி.சி.ஐ. ஆலோசனை செய்ய வேண்டும்- ஐ.சி.சி. தலைவர்


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வீரரான ஜாகீர் அப்பாஸ் தற்போது ஐ.சி.சி. தலைவராக உள்ளார். இவர் இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய தொடரான ஐ.பி.எல். தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறுவதற்கு பி.சி.சி.ஐ. ஆலோசனை செய்ய வேண்டும் கூறியுள்ளார்.


இந்தியாவி்ல் கடந்த 2008-ம் ஆண்டு முதன்முதலாக ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) தொடர் தொடங்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றார்கள். வேகப்பந்து வீச்சாளர் தன்வீர் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார். மேலும், பெரும்பாலான வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.

துரதிருஷ்டவசமாக மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப்பின் பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் கலந்து கொள்ளமுடியவில்லை. இந்த நிலை தற்போது வரை நீடிக்கிறது.

தற்போது புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டள்ள பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர், ‘‘ஐ.பி.எல். போன்ற பெரிய தொடரில்களில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததால் அவர்களுடைய ஒருநாள் மற்றும் டி20 ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்களை ஐ.பி.எல். தொடரில் சேர்க்க ஆலோசனை செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜாகீர் அப்பாஸ் கூறுகையில் ‘‘ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல். இறுதிப்போட்டியை காண வருமாறு பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவர் அனுராக் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பு நான் ஏற்றுள்ளேன். இது எனக்கு ஒரு நல்லவாய்ப்பு. ஏனென்றால், இந்தியா சென்று மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற முயற்சி செய்வேன். இருந்தாலும், இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும், அவரவர் அரசின் அனுமதியை சார்ந்திருக்கிறது. இருநாட்டு அரசும் இந்த தொடருக்கான தடைகளை உடைத்தெறிய வேண்டுமும் என்று நினைக்கிறேன்.

பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றால், இந்த தொடர் மேலும் முக்கியத்துவம் அடைந்து உயர்ந்த இடத்தைபெறும். இந்தியாவில் பி.சி.சி.ஐ.யின் உயரதிகாரிகளை சந்தித்து மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் ஈடுபடும் வகையில் ஆலோசனை நடத்த வலியுறுத்துவேன்’’ என்றார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலானோர் இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.