சூரியனை புதன் கோள் கடந்து சென்ற அரிய நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதை தமிழகத்தில் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-
‘புதன் கடப்பு’
சூரிய குடும்பத்தில் ஒன்றாக புதன் விளங்குகிறது. சூரியனுக்கும், புதனுக்கும் இடையேயான தூரம் 12 கோடி கிலோ மீட்டர் ஆகும். புதனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 5.8 கோடி கிலோ மீட்டர்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டில் புதன் வருவதை ‘புதன் கடப்பு’ என்று அழைக்கிறோம். இந்த நிகழ்வு 100 வருடங்களுக்கு 13 முறை நடைபெறும். கடந்த முறை 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த முறை நேற்று சூரியனை புதன் கடந்து செல்லும் நிகழ்ச்சி மாலை 4.46 மணி தொடங்கி 5.46 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிகழ்வை வெறும் கண்ணால் யாரும் பார்க்க கூடாது. எனவே பிர்லா கோளரங்கத்தில் 3 தொலைநோக்கி கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அரிய நிகழ்வு
இந்த தொலைநோக்கிகள் மூலம் புதன் கடப்பு நிகழ்ச்சியை சுமார் ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். இது போன்ற ஏற்பாடுகள் தமிழகத்தில் திருச்சி மற்றும் வேலூரிலும் செய்யப்பட்டிருந்தது. அங்கும் ஏராளமானோர் இந்த அரிய நிகழ்வை கண்டுகளித்தனர்.

இந்த புதன் கடப்பு நிகழ்வை வடஅமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காண முடிந்தது. அடுத்த புதன் கடப்பு நிகழ்வு 2019-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி நடைபெறும். ஆனால் இந்தியாவில் தெரியாது. அதன் பிறகு 2032-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் புதன் கடப்பு நிகழ்ச்சி தான் இந்தியாவில் தெரியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேலூர்
புதன்கோள், சூரியனை கடக்கும் நிகழ்வை பொதுமக்கள் பார்க்க வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொலைநோக்கி மூலம் சூரிய பிம்பத்தை திரையில் விழவைத்தனர்.
சூரியனின் பிம்பம் திரையில் விழுந்தது. அப்போது அதன் மேல் பகுதியில் புதன்கோள் சிறிய புள்ளிபோன்று தெரிந்தது. அதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.