Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 20, 2016

அதிவேக ஆம்லெட்-வீடியோ இணைப்பு


ஹாவார்ட் ஹெல்மெர்.. இவர் ‘ஆம்லெட்’ போடுவதில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். ஆம்லெட் போடுவதில், இவரது வேகத்துக்கு இணையானவர்கள் உலகில் எவரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த ஆண்டில் மட்டும், 39 நொடிகளில் ஒரு ஆம்லெட் போட்ட சாதனை, 30 நிமிடங்களில் 437 ஆம்லெட்கள் போட்ட சாதனை என இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார், இந்த ஆம்லெட் மன்னன்.

72 வயதை தொட்டிருக்கும் ஹெல்மெருக்கு, 42 வயதிலிருந்தே ஆம்லெட் ஆர்வம் ஆரம்பித்துவிட்டதாம். ‘முட்டைகளை ஏற்றுமதி–இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது தான், முட்டைகளைப் பற்றிய சுவையான விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அப்படியே விதவிதமாக ஆம்லெட் போடவும் கற்றுக்கொண்டதால், சமையல் கண்காட்சிகள், உணவகங்கள், சமையல் வகுப்புகள், தொலைக்காட்சி என ஆம்லெட் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன். இதனால் ஆம்லெட் போடுவதில் பிரபலமான சமையல் கலைஞர் என்ற பட்டமும் கிடைத்துவிட்டது. உலகத்தர பத்திரிகைகளில் உணவுப் பகுதிகளுக்கு, முட்டை உணவுக் குறிப்புகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறேன்’ என்று மனம் திறக்கிறார் ஹெல்மெர். இவர் தற்போது முட்டை உணவுகளை பிரபலப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளை வலம் வந்து கொண்டிருக்கிறார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.