Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2016

திருமணமானதை மறைத்து 2-ம் திருமணம் செய்ய முயற்சி மணமேடையில் வாலிபர் கைது


திருமணமானதை மறைத்து 2-ம் திருமணம் செய்ய முயன்ற வாலிபரை திருமண மேடையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

திருமணம்
புனே மாவல் பகுதியை சேர்ந்தவர் நவ்நாத் பவார்(வயது 31). இவர் கோத்ரூட் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்த அவர், இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினார். இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடத்தது. நேற்று முன்தினம் இவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது.

திருமண மேடையில் நவ்நாத் தன் வருங்கால மனைவிக்காக காத்துக்கொண்டிருந்தார். உற்றார், உறவினர்கள் மேடையில் கூடியிருந்தனர்.

மணமகன் கைது

அப்போது திருமணத்தில் கலந்துகொள்ள வந்த மணமகளின் உறவினர் ஒருவர் மணமகன் நவ்நாத் பவாரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையானவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

இதுகுறித்து அவர் பெண் வீட்டாருக்கு தெரிவித்தார். இதையறிந்த பெண் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இருப்பினும் அதை நம்பாத பெண் வீட்டார் மணமகன் குறித்து தாங்கள் கேள்விப்பட்டது உண்மைதானா? என்று விசாரித்தனர். இதில் நவ்நாத் மணப்பெண்ணின் குடும்பத்தை ஏமாற்றி நாடகமாடிய குட்டு வெளிப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் திருமண ஏற்பாடுகளையும் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருமண மேடையில் பெண்ணின் கரங்களை பிடிக்க காத்திருந்த நவ்நாத்தின் கையில் விளங்கு மாட்டி கைது செய்து அழைத்துச்சென்றனர். சினிமா காட்சியை போல அரங்கேறிய இந்த சம்பவத்தை பார்த்த அனைவரும் திகைத்து நின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.