Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

ஆயிரக்கணக்கில் குவிந்த வாகனங்கள்: கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெருக்கடி


கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் தற்போது இதமான தட்ப வெப்பநிலை உள்ளது. மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசுவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் ஏராளமானோர் குடும்பத்தினருடன் கார்களில் வந்தவண்ணம் உள்ளனர்.

இதனால் கொடைக்கானல் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்ட போதிலும் அங்கும் வாகன நெருக்கடி தொடர்கிறது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி, மூஞ்சிக்கல், பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் உள்ளது.

பெரும்பகுதி நேரம் வாகனங்களிலே இருக்க வேண்டியநிலை உள்ளதால் சுற்றுலா பயணிகளால் பார்க்க வேண்டிய இடங்களை முழுமையாக காணமுடியவில்லை. மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பல மணிநேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால் சிரமப்படுகின்றனர்.

தற்போது சீசன் காலம் என்பதால் பல இடங்களில் இருந்தும் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிகளவு வாகனங்கள் வருவதால் நகரின் பல இடங்களிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆமை வேகத்திலேயே வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன.

இதனால் ஆங்காங்கே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. போதிய போக்குவரத்து போலீசார் இல்லாததால் நெரிசலை உடனடியாக சீரமைக்க முடியவில்லை. இதனால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிஉள்ளது என்றனர்.

ஜூன் முதல் வாரம் பள்ளிகள் தொடங்கிவிடும் என்பதால் வழக்கமாக 10 நாட்கள் நடைபெறும் கோடை விழா இந்த ஆண்டு தேர்தல் காரணமாக குறைந்த நாட்களே நடைபெறும் நிலை உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மே 28,29–ம் தேதிகளில் மலர்கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யும்படி தோட்டக்கலைத்துறைக்கு உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதிதாக பொறுப்பேற்க உள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மலர்கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளனர் என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.