Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 28, 2016

நகைகடைகளாக வளம் வந்த முன்னாள் எம் எல். ஏ வீட்டு பெண்கள்


குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சமய விழாவில் கலந்துகொண்ட முன்னாள் எம்எல்ஏவின் மனைவி நடமாடும் தங்க கடை போன்று வந்துள்ளது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரில் சமய விழா நடைபெற்றது, இந்த விழாவில் முன்னாள் எம்எல்ஏ புகுரா என்பவரது மனைவியும், அவரது குடும்ப பெண்களும் அளவுக்கதிகமான நகைகளை அணிந்து வந்துள்ளனர்.

மேலும் ஆண்களும் ஆயுதங்களையும், துப்பாக்கி குண்டுகளையும் கொண்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடும் கண்டனங்கள் எழவே முன்னாள் எம்எல்ஏ, புகுராவின் மனைவி, மகள் மற்றும் போர்பந்தர் பகுதியை சேர்ந்த தாதா பீமா துலா ஒதேராவின் மகன் லஷ்மண் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக புகுரா கூறுகையில், தனது குடும்ப உறுப்பினர்கள் நிகழ்ச்சியின் போது, புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்தனர். இந்த துப்பாக்கிகளுக்கு முறையான உரிமம் வாங்கப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கியால் சுடவில்லை.

எனது மனைவி, உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் போஸ் கொடுத்ததற்காக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.