இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் நடந்த 9-வது பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இதில், பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் வீசிய 11 வது ஓவரின் முதல் பந்தில் குஜராத் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அவுட் வழங்கப்பட்டது.
இதற்கு ரவீந்திர ஜடேஜா எதிர்ப்பு தெரிவித்தார், பிரீமியர் கிரிக்கெட் 2.1.5 விதிமுறைப்படி அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குற்றமாகும். எனவே, இனிவரும் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.