Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2016

நாடு முழுவதும் 1,000 கி.மீ தூரத்திற்கு 'எக்ஸ்பிரஸ்வே' நெடுஞ்சாலைகளை அமைக்கிறது மத்திய அரசு; பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாகனங்களின் போக்குவரத்து நெருக்கடிக்கு ஏற்றாற்போல் புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.16,680 கோடி செலவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. 4-வது கட்டமாக நிறுவப்படும் இந்த நெடுஞ்சாலைகளில் மும்பை-வதோதரா (400 கி.மீ), குஜராத்-மகாராஷ்டிரா, டெல்லி-மீரட் (66 கி.மீ), டெல்லி, உத்தரபிரதேசம் என்.எச்-58, பெங்களுரு-சென்னை (334 கி.மீ), கர்நாடகா-தமிழ்நாடு என்.எச்-4 ஆகிய பாதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, டெல்லி-ஜெய்ப்பூர் (261 கி.மீ), டெல்லி-ராஜஸ்தான் என்.எச்-8, டெல்லி-சண்டிகர் (249 கி.மீ), டெல்லி-பஞ்சாப்-ஜம்மு (என்.எச்-1, என்.எச்-22), கொல்கத்தா-தன்பாத் (277 கி.மீ), மேற்கு வங்காளம்- ஜார்கண்ட், டெல்லி-ஆக்ரா (200 கி.மீ), டெல்லி-உத்தரபிரதேசம் என்.எச்-2 ஆகியவைகளும் அடங்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.