மரத்வாடாவில் வறட்சியின் உச்சமாக, போதிய தண்ணீர் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அனுமதிப்பதை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
போதிய தண்ணீர் இல்லை
மராட்டியத்தில் நிலவும் வறட்சி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மரத்வாடா மண்டலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் இந்த பகுதிகளில் வாழும் மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள கிணறுகளும், குளங்களும் வறண்டு பாலைவனங்களாக காட்சி தருகின்றன.
இந்தநிலையில் மரத்வாடா மண்டலத்தில் உள்ள உஸ்மனாபாத் அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் போதிய தண்ணீர் இல்லாததால் நோயாளிகளை அனுமதிப்பதை ஆஸ்பத்திரி நிர்வாகம் நிறுத்தி உள்ளது.
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் பிரகாஷ் ஹபார்டே கூறியதாவது:-
வறண்ட ஆழ்துளை கிணறுகள்
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள 2 ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டன. இதனால் ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி விடுதி மாணவர்கள் 150 பேருக்கு 2 நாட்களுக்கு முன்னரே விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரியில் மொத்தம் 170 படுக்கைகள் உள்ளன. தற்போது 80 நோயாளிகள் மட்டுமே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான தண்ணீர் கூட தற்போது இல்லை. எனவே புதிதாக வரும் நோயாளிகளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்பத்திரியின் இந்த முடிவு குறித்து சிவசேனா மாவட்ட தலைவர் சுதீர் பாட்டீல் கூறுகையில், ‘‘ஆஸ்பத்திரி நிர்வாகம் தன்னிச்சையாக நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்தியுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளோம். சிவசேனா சார்பில் ஆஸ்பத்திரிக்கு டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்படும்’’ என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.