Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

கேரள முன்னாள் முதல்–மந்திரி அச்சுதானந்தன் வாக்களிப்பதை எட்டிப்பார்த்த எம்.எல்.ஏ. மீது வழக்கு


கடந்த 16–ந் தேதி, கேரள சட்டசபை தேர்தல் நடந்தபோது, அம்பலப்புழா சட்டசபை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்–மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் வாக்களித்தார். அப்போது, அவர் வாக்களித்த மறைப்புக்கு அருகே அச்சுதானந்தனின் மகன் அருண் குமாரும், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருமான ஜி.சுதாகரனும் நின்று கொண்டிருந்தனர்.

சுதாகரன், மறைப்பைத் தாண்டி, அச்சுதானந்தன் வாக்களிப்பதை எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுக்கூர், தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். அதை ஏற்று, மாநில தலைமை தேர்தல் அதிகாரி இ.கே.மஜி உத்தரவின்பேரில், சுதாகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் சுதாகரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.