பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சியின் பாதுகாப்பு வாகனம் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சியின் பாதுகாப்பு வாகனம் தீவைத்து எரிப்பு
பீகார் மாநிலம் கச்சார் பகுதியை சேர்ந்த லோக் ஜனசக்தி தலைவர் சுதேஷ் பஸ்வானும், அவரது உறவினர் ஒருவரும் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுதேஷ் பஸ்வானின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி இன்று பஸ்வானின் கிராமத்துக்கு சென்றார். அப்போது அங்கே இருவரின் பிணங்களை வைத்துக்கொண்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மஞ்சியின் கார் அணிவகுப்பை பார்த்ததும் அவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். அவரது கார் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஜீப்பை தீ வைத்து எரித்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள துமாரியா போலீஸ் நிலையம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையம் மீது கற்கள் மற்றும் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். கல் வீச்சில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் மனோஜ் யாதவ் காயம் அடைந்தார்.
இதையடுத்து, உடனே போலீசார் தடியடி நடத்தினர். எனினும் கூட்டம் கலையாததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின்னரே கூட்டம் கலைந்து சென்றது.
இந்த வன்முறை சம்பவத்தில் மஞ்சி காயம் எதுவுமின்றி தப்பினார். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதாகவும் எனினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.