Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

டெல்லியில் இருந்து விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கட்டணம் குறைய வாய்ப்பு


கடந்த பல ஆண்டுகளாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் விமான பயணிகளிடம் வளர்ச்சிக் கட்டணமாக உள்நாட்டு போக்குவரத்திற்கு ரூ.100-ம், வெளிநாட்டு போக்குவரத்திற்கு ரூ.600-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விமான கட்டண ஒழுங்குமுறை ஆணையமான ஏ.இ.ஆர்.ஏ. இன்று முதல் வளர்ச்சி கட்டணத்தை டெல்லி விமான நிலையம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தின் வளர்ச்சிக்காக ரூ.3,415.35 கோடி வரை கட்டணத்தில் இருந்து வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தின் ஒருபகுதியில் வளர்ச்சி நிதியாக மாதந்தோறும் பெறப்பட்ட சராசரி ரூ.30 கோடியை தாண்டியது. இதையடுத்து, ஏப்ரல் 30-ந்தேதிக்குள்ளாகவே இலக்கை எட்டிவிட்டதால் இனி வசூலிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இனி டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் போது விமான கட்டணம் சற்று குறைய வாய்ப்புள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.