Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2016

பெண் புகைப்படக்கலைஞர் எடுத்த புகைப்படத்தில் அபூர்வ காட்சி


இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த புகைப்படக்கலைஞர் திரிஷா ஹாக் ( வயது 44) வாகனத்தில் பயணித்தபடியே கருமேகங்களால் சூழ்ந்த வானத்தின் அழகை ரசித்த அவர் தமது கேமிராவில் அதை படம் பிடிக்க முடிவு செய்து வாகனத்தை நிறுத்தி சில புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் மேகங்களுக்கிடையே வானத்தில் ஒரு அபூர்வ காட்சியை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளார் திரிஷா.

அதில் மேகங்களுக்கிடையே வானத்தின் எல்லை நோக்கி ஒரு ஏணிப்படி இருப்பதை அவர் கண்டுள்ளார். கடவுள் நம்பிக்கை மிகுந்த அவர் இந்த காட்சியின் விளக்கம் என்னவென தெரியவில்லை என்றாலும், அது எதையோ உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற விசித்திரமான காட்சிகளை அவர் மேகத்தினூடே கண்டு வியப்படைந்தது முதன் முறையல்ல. காலை நேர வானத்தில் தோன்றும் பல்வேறு காட்சிகளை அவர் புகைப்பட தொகுப்பாகவும் வெளியிட்டும் உள்ளார். ஆனால் மேகங்களுக்கிடையே தோன்றிய இந்த ஏணிப்படி கண்ணை விட்டு அகல மறுப்பதாக திரிஷா ஹாக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.