காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒருதலை காதல்
அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள புரூட்காவ் கிராமத்தை சேர்ந்த வாலிபர் பிரதிப் (வயது25). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த மோகினி (17) என்ற இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். அண்மையில் அவர் மோகினியை நேரில் சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும்படி வற்புறுத்தினார். ஆனால் காதலிக்க முடியாது என்று மோகினி மறுத்து விட்டார். மேலும் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
கழுத்தை அறுத்தார்
இது பிரதிப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தனக்கு கிடைக்காத மோகினியை வேறு யாரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்து பிரதிப் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பிரதிப் நேற்று காலை 11 மணியளவில் மோகினி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அப்போது அவரை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி மோகினி எச்சரித்தார். இதனால் மேலும் கோபம் அடைந்த பிரதிப் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகினியின் கழுத்தை அறுத்து விட்டு ஓடி விட்டார்.
சாவு
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மோகினி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். வெளியில் சென்று வீடு திரும்பிய பெற்றோர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்த அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரதிப்பை வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.