தன்னிடம் நகைப்பறிக்க முயன்ற போலி போலீசை பொதுமக்கள் உதவியுடன் 81 வயது மூதாட்டி ஒருவர் போலீசில் பிடித்து கொடுத்தார்.
81 வயது மூதாட்டி
மும்பை வடாலா, ஜி.டி. அம்பேத்கர் சாலை அனுமான் கோவில் அருகில் உள்ள லேண்ட்மார்க் டவர் கட்டிடத்தில் வசித்து வரும் மூதாட்டி புஷ்பாபேன்(வயது81). இவர் நேற்றுமுன்தினம் காலை கோவிலுக்கு கையில் ஊன்றுகோலுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த ஒருவர், தன்னை குற்றப்பிரிவு போலீஸ்காரர் என அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் அவர், புஷ்பாபேனிடம் இந்த பகுதியில் நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறி, அவர் அணிந்திருக்கும் நகையை கழற்றி கைப்பையில் வைக்குமாறு கூறினார்.
ஊன்று கோலால் அடித்தார்
அந்த நபரின் பேச்சில் சந்தேகம் அடைந்த புஷ்பாபேன் சுதாரித்து கொண்டு, ‘எல்லாம் எனக்கு தெரியும், இங்கிருந்து நீ போ’ என்று எச்சரித்தார். இதற்கிடையே, ஒரு வாடகை காரில் வந்த மேலும் 3 பேர் மூதாட்டியிடம் சென்று, நகையை கழற்றும்படி மிரட்டினர். இதனால் கோபம் அடைந்த புஷ்பாபேன் தனது ஊன்று கோலால் 4 பேரையும் அடித்து, திருடன்...திருடன்...என்று சத்தம் போட்டார்.
அவரது சத்தம்கேட்டு நடைபாதை கடைக்காரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவரை அடித்து உதைத்து ஆர்.ஏ.கிட்வாய் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஒருவர் கைது
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவரது பெயர் அலிராஜா ஜாப்ரி(வயது49) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த போலி போலீஸ் அடையாள அட்டையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் போல் நடித்து அவர், பல மூதாட்டிகளை குறி வைத்து நகைகளை பறித்து வந்ததாக தெரிவித்தார். தப்பியோடிய அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
துணிச்சலுடன் செயல்பட்டு தன்னிடம் நகைப்பறிக்க முயன்ற கும்பலை சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து கொடுத்த மூதாட்டி புஷ்பாபேனை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.