நாசிக்கில் ராணுவ வெடி மருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 அதிகாரிகள் உள்பட 20 வீரர்கள் உடல் கருகி பலியானார்கள்.
மராட்டிய மாநிலம் நாசிக் அருகே புல்கான் வர்தா என்ற இடத்தில் ராணுவவெடி மருந்து கிடங்கு உள்ளது. இங்கு ராணுவத்துக்கு தேவையான வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.
இங்கு பாதுகாப்பு பணியில் ராணுவ அதிகாரிகள் தலைமையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இன்று அதிகாலையில் இங்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் பயங்கரமாக வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தன. தொடர்ந்து 2-வது முறையாகவும் வெடிச்சத்தம் கேட்டது. இதனால் குடோன் முழுவதும் இருந்த வெடி மருந்து பயங்கரமாக தீப்பற்றி எரிந்தன.
உடனே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அருகில் நெருங்க முடியாத அளவுக்கு தீப்பிடித்து எரிந்ததால் தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.
உள்ளே இருந்த வீரர்களும், அதிகாரிகளும் சிக்கிக்கொண்டனர். கிடங்கை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உள்ளே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பலரை மீட்டனர். அதில் 2 ராணுவ அதிகாரிகளும், 18 ராணுவ வீரர்களும் கருகி பலியானார்கள். மேலும் 20 ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு புல்தான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ராணுவ குடோனைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகளும், கிராம மக்களும் வசிக்கிறார்கள். தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருப்பதால் குடியிருப்புகளில் வசித்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான தீயணைப்பு படையினரும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அடுத்தடுத்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
எனவே, நாசவேலை காரணமா? என்றும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.