Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல்


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. சீனிவேல் மரணம் அடைந்து விட்டார்.

சீனிவேல் மரணம் அடைந்துள்ளதால் அங்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது அந்த தொகுதி காலியாக உள்ளது. இது குறித்து முறையாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளேன்.

3 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் அது குறித்த முடிவை இந்திய தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும்.

வரவு-செலவு கணக்கு தாக்கல்

நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்யவேண்டும். இதற்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 19-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகம் ழுழுவதும் பறக்கும்படையினர் இந்த சட்டசபை தேர்தலின்போது சோதனை போட்டதில் ரூ.105 கோடியே 20 லட்சம் பிடிபட்டது.

அதில் சரியான ஆவணம் காண்பித்ததால் ரூ.47 கோடியே 40 லட்சம் பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. மீதம் உள்ள பணத்திற்கும் சரியான ஆவணங்கள் கொடுத்தால் அந்த பணமும் திருப்பி கொடுக்கப்படும்.

வாக்கு பதிவு குறைந்த இடத்தில் ஆய்வு

இப்போது நடைபெற்ற தேர்தலின்போது வாக்குப்பதிவு எந்த பகுதியில், எந்த வாக்குச்சாவடியில் குறைந்தது என்று ஆராய்ந்து வருகிறோம். எதற்காக குறைந்தது என்று கல்லூரி மாணவர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

750 வாக்காளர்கள் இருந்தால் அந்த பகுதியில் புதிதாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்கள் வாக்களிக்க அதிக தூரம் நடந்து செல்லவேண்டி இருந்ததால் வாக்களிக்கவில்லை என்று தெரிந்தால் ஒவ்வொரு பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மேலும் தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்படும். அதாவது நெடு தூரம் நடந்து சென்று வாக்களிக்காமல் அருகில் வாக்களிக்க வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்படும்.

தமிழக தேர்தல் செலவு ரூ.220 கோடி. அதில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரூ.25 கோடி செலவழிக்கப்பட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு

தேர்தலில் வெற்றி தோல்வி குறித்து சென்னை ஐகோர்ட்டில்தான் வழக்கு தொடர வேண்டும். சட்டரீதியில் சந்திக்க வேண்டும்.

ஒருவர் பெயரில் பல வாக்காளர்கள் இருக்கலாம். ஒரு வாக்காளருக்கு இரு இடங்களில் வாக்குரிமை இருக்கலாம். அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களிடம் பேச இணையதளத்தின் மூலமாக எஸ்.எம்.எஸ். அனுப்பும் திட்டம் உள்ளது.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.