Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 26, 2016

ஐந்துநாள் அயிட்டங்களை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் ரூ. 50 ஆயிரம் பரிசு: இங்கல்ல, இங்கிலாந்தில்


இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள பிரபல உணவகம் பத்தாயிரம் கேலரிகளை உள்ளடக்கிய சிக்கன் உணவுகளை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் 500 பவுண்டுகளை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள பிரபல உணவகம் பத்தாயிரம் கேலரிகளை உள்ளடக்கிய சிக்கன் உணவுகளை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் 500 பவுண்டுகளை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள டார்லிங்டன் உணவகத்தின் சமையல்கலைஞர்கள் அறிவித்துள்ள இந்த போட்டியில் ஐந்துநாட்களுக்கு ஒரு மனிதருக்கு தேவையான சிக்கன் உணவு வகைகள் இலவசமாக பரிமாறப்படும். இங்கிலாந்தின் சாப்பாட்டுராமன் என்றழைக்கப்படும் ஆடம் மோரன்(30) என்பவர் இந்த போட்டியில் சமீபத்தில் பங்கேற்றார்.


பாதிபோட்டியிலேயே மூச்சுத்திணறி அவர் ‘ஜகா வாங்கி’விட, அடுத்த போட்டியாளராக இந்த உணவகத்தின் சவாலை எதிர்கொண்டு, ஓசியிலேயே சிக்கன் வகைகளை ஒருகட்டு கட்டிவிட்டு பரிசுத்தொகையை பெறப்போகும் புரட்சியாளர் யார் என்பது தெரியவில்லை.

போட்டிக்கான ஒரே நிபந்தனை என்னவென்றால், பரிமாறப்பட்ட மொத்த அயிட்டங்களையும் ஒரேவேளையில், 45 நிமிடங்களுக்குள் தின்று தீர்த்துவிட வேண்டும்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.