பருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்வதன் காரணமாக எலிபெண்டா குகைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பருவநிலை மாற்றம்
உலக வெப்பமயமாதல் காரணமாக பருவநிலை தொடர்ந்து மாற்றத்திற்குள்ளாகி வருகிறது. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரள மாநிலம் கொச்சியில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடந்தது. யுனஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டன.
இதில் கடல் நீர் மட்டம் உயர்வதால் உலக பாரம்பரிய சின்னங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது உலகின் 130 பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எலிபெண்டா குகை
இதில் மும்பை கடல் தீவில் உள்ள எலிபெண்டா குகையும் ஒன்றாகும். கலை நுணுக்கம் மிக்க சிற்ப வேலைபாடுகளுடன் இந்து முறைப்படி அமைக்கப்பட்ட எலிபெண்டா குகை உருவான காலத்தை இதுவரை சரியாக கணிக்கமுடியவில்லை. இருப்பினும் கி.பி. 6-ம் நூற்றாண்டில் இருந்து 8-ம் நூற்றாண்டிற்குள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்களும், கலை ஆர்வம் மிக்க சுற்றுலாப்பயணிகளும் படையெடுத்துவரும் இந்திய பாரம்பரிய சின்னமான எலிபெண்டா குகை பருவநிலை மாற்றம் காரணமாக ஆபத்தின் விளிம்பில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.