Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரசவம்: உயிருடன் பிறந்தது குழந்தை


கார் விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த பிறகும் அவருக்கு பிரசவம் பார்த்து டாக்டர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்றினர்.

அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப் கிரர்டேயு நகரில் சாரா இல்லர் மற்றும் அவரது கணவர் மேட் ரைடர் ஆகியோர் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியான சாராவை அழைத்துக் கொண்டு ரைடர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனைக்கு செல்லும் வகையில் வீட்டில் இருந்து சுமார் 60 மைல் தூரத்தில் அவர்களது கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாரா மற்றும் ரைடர் இருவரையும் காரில் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சாரா ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, சாராவிற்கு மருத்துவர்கள் அவசரமாக சிசேரியன் செய்தனர்.

அழகான பெண் குழந்தை உயிருடன் பிறந்தது. குழந்தை 2.24 கி.கி எடையுடன் இருந்தது. இருப்பினும் பிறந்தவுடன் குழந்தை வெண்டிலேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டது.

அந்த குழந்தை கண்களை திறந்து நர்சின் விரல்களை பற்றிக் கொண்டதாக சாராவின் தங்கை தெரிவித்தார். தாய் இறந்த பிறகு குழந்தை பிறந்தால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

இருப்பினும் குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தையான மேட் ரைடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.