ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் இப்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட் வாங்கினால் ரூ.30 சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பலர் கார்டுகளுக்கு பதில் பணமாக கொடுத்தே டிக்கெட் வாங்கி வருகிறார்கள். எனவே இந்த சேவை கட்டணத்தை ரத்து செய்ய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே இனி முன்பதிவு மையங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் வாங்கினால் சேவை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதேசமயம் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வசூலிக்கப்படும் சேவை கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.