இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர் அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தம்பதி மொஹிந்தர் சிங் கில் (வயது 79), தல்ஜிந்தர் கவுர்(வயது 72).
இவர்களுக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை இல்லை, இதனால் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக ஹிஸாரை சேர்ந்த தேசிய கருத்தரிப்பு மற்றும் சோதனை குழாய் மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை எடுத்துக் கொண்டதில் தற்போது அழகான குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தேசிய கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர் அனுராக் பிஷ்ணோய் கூறுகையில், எங்களது இரு முயற்சிகள் தோல்வியடைந்தன, மூன்றாவது முயற்சி வெற்றியடைந்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தல்ஜிந்தர் கவுர் கூறுகையில், நான் இந்த வயதில் கருத்தரிக்க முடியாது என ஒருபோதும் நினைக்கவில்லை. ஒரு குழந்தையை சுமக்ககூடிய பலம் இருக்கிறது என தீர்க்கமாக நம்பினேன்.
கடவுள் எங்களது பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டார், என் வாழ்க்கை முழுமையாகி விட்டதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.