Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 18, 2016

கொலம்பியா நாட்டில் ரூ.1,560 கோடி போதைப் பொருள் பறிமுதல்


கொலம்பியா நாட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1,560 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரிசுத் தொகை

தென் அமெரிக்கா நாடுகள் பலவற்றில் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கும், பல்வேறு உலக நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது.

குறிப்பாக கிளான் யுசுவா என்பவன் தலைமையில் செயல்படும் போதை மருந்து கடத்தல் கும்பல்தான் உலக அளவில் மிகப்பெரிய கும்பலாக கருதப்படுகிறது. தலைமறைவாக உள்ள கிளான் யுசுவாவை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.30 கோடி பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.

ரூ.1,560 கோடி மதிப்பு

இந்த நிலையில் கொலம்பியாவின் எல்லையையொட்டிய டர்போ நகரில் ஒரு வாழைத்தோட்டத்தில் பூமிக்கு அடியில் சுரங்கம் அமைத்து கொகைன் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கொலம்பியா போதைப் பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கொகைன் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுக்கி வைத்து இருந்து 8 டன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1,560 கோடி) ஆகும். மேலும் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மிகப்பெரிய வேட்டை

இதுபற்றி கொலம்பியா ஜனாதிபதி ஜூவன் மானுவல் சாண்டோஸ் கூறுகையில், ‘‘நாட்டின் வரலாற்றிலேயே வேட்டையில் சிக்கிய மிக அதிக அளவிலான போதைப் பொருள் இதுவாகும். போதை மருந்து கடத்தல் கும்பல் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கிறது’’ என்றார்.

ராணுவ மந்திரி லூயிஸ் கார்லோஸ் வில்லேகாஸ் கூறும்போது, ‘‘பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்து அனைத்தும் கிளான் யுசுவாவிற்கு சொந்தமானவை’’ என்றார்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியும், ராணுவ மந்திரியும் போதை மருந்து கைப்பற்றப்பட்டது பற்றி பெருமையாக கூறுவதன் மூலம் இந்த நடவடிக்கை எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று தென் அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

450 டன் உற்பத்தி

ஐ.நா. சபை மதிப்பீட்டின்படி கொலம்பியா நாட்டில் சட்டவிரோதமாக ஆண்டுக்கு 450 டன் வரை கொகைன் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 252 டன் போதை மருந்து பொருள் கொலம்பியாவில் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.