புதுடெல்லியில் 12ம் வகுப்பு மாணவர் ஒருவரை அவரது வீட்டுக்கு வெளியே வைத்து 6 இளைஞர்கள் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது.
டெல்லியின் தென்கிழக்கே மதாங்கீர் பகுதியை சேர்ந்தவர் தீபு (வயது 18). அரசு பள்ளி கூடம் ஒன்றில் படித்து வந்த மாணவரான இவர் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை மாலை தீபுவுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அவர் வெளியே சென்றுள்ளார்.
சில நிமிடங்களில் தனது வீட்டை நோக்கி அவர் ஓடி வந்துள்ளார். அவரை 6 இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று துரத்தி வந்துள்ளது. தீபுவின் வீட்டருகே அவரை சூழ்ந்து கொண்ட அந்த கும்பல் கத்தியால் பலமுறை குத்தியுள்ளது. அதன்பின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இந்த சம்பவம் குறித்து அருகே இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் தீபுவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். அந்த கும்பல் தீபுவை 40 முறைக்கு மேல் குத்தியுள்ளனர் என உள்ளூர்வாசிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடைபெறும் என போலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் பற்றி கொலை வழக்கு ஒன்று பதிவு செய்துள்ள போலீசார் சில சிறுவர்கள் இதில் ஈடுபட்டிருக்க கூடும் என்றும் சந்தேகிக்கின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.