Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

வீடியோ: அகதிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த ஜெர்மனி எதிர்க்கட்சித் தலைவர் - முகத்தில் கேக் வீச்சு


ஜெர்மனில் அகதிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் முகத்தில் அகதிகள் ஆதரவு அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாக்லெட் கேக்கினை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் கட்சியை சேர்ந்த எம்.பி.யான ஷாரா வேகன்கெனிசட். இவர் தொடர்ந்து அகதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தார்.

பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகள் வருகை தருவதன் காரணமாகத்தான், ஜெர்மனில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி, எந்தெந்த நாடுகளில் இருந்து அகதிகள் அதிகமாக வருகின்றனர், அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற புள்ளிவிபரத்தையும் எடுத்து வெளியிட்டுள்ளார், இவரின் இந்த செயல்பாடுகள் அகதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் அமைப்பினர் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெர்மனியில் அக்கட்சி மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென உள்ளே நுழைந்த ஒருவர், வேகன்கெனிசட் முகத்தில் சாக்லெட் கேக்கினை தடவியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பெண் எம்பியும், பிற உறுப்பினர்களும் தடுமாறியுள்ளனர், அதன் பின்னர் அக்கட்சியின் உறுப்பினர்கள் அவரது முகத்தில் இருந்த கேக்கினை ஒரு துணியால் சுத்தம் செய்ததோடு மட்டுமல்லாமல், பத்திரிகையாளர்கள் அவரை புகைப்படம் எடுக்க முயற்சிக்கையில், எடுக்க வேண்டாம் என கூறி ஜாக்கெட்டை வைத்து மறைத்துள்ளனர்.

இந்த செயல் குறித்து ஆதரவாளர் கூறியதாவது, அகதிகளுக்கு எதிராக இவர் செயல்பட்டு வருவது மிகவும் மனிதாபிமானமற்ற செயலாக உள்ளது என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.