ராட்டினம் உடைந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக பொழுது போக்கு பூங்கா உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
ராட்டினம் உடைந்து பலி
தாம்பரம் அருகே கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் புதிதாக ‘டிஸ்கோ’ என்ற புதிய வகை ராட்டினம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை பூங்கா நேரம் முடிந்தவுடன் பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் சென்று விட்டனர்.
அங்கு பணிபுரியும் ஊழியர்களை வைத்து ‘டிஸ்கோ’ வகை ராட்டினம் சோதனை செய்யப்பட்டது. அப்போது திடீரென அந்த ராட்டினம் மூன்றாக உடைந்து விழுந்தது. இதில் ராட்டினத்தில் இருந்த ஊழியர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
அனைவரையும் மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சோமங்கலம் அடுத்த பழைய நல்லூர், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மணி(வயது 22) என்பவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். கேசவன், சைபுதீன், குணசேகரன், தயாளன், லோகேஷ், தினேஷ், தென்னரசு, அசோகன், கலையரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மணல் மூட்டைகள்
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விழுந்து கிடந்த ராட்டினத்தின் அடியில் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? என்று சோதனை செய்தனர். சம்பவ இடத்தில் சோமங்கலம் போலீசாரும் விசாரணை நடத்தினர்.
கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்டம் அதிகம் வரும் என்பதால் பொழுதுபோக்கு பூங்காவில் ‘டிஸ்கோ’ என்ற புதிய வகை ராட்டினம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. அதன் சோதனை ஓட்டத்துக்கு மனித உடலின் எடைக்கு ஏற்ப மணல் மூட்டைகளை வைத்துதான் சோதனை செய்ய வேண்டும்.
ஆனால் பொழுது போக்கு பூங்காவில் ஊழியர்களை அமர வைத்து சோதனை செய்யப்பட்டதாகவும், இதில் பாரம் தாங்காமல் ராட்டினம் உடைந்து விழுந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உரிமையாளர்–மேலாளர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக பொழுது போக்கு பூங்காவின் உரிமையாளர் ஜோஸ் குன்னூஸ் மற்றும் மேலாளர் சக்திவேலன் ஆகிய 2 பேரை நேற்று மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.
மேலும் அந்த பொழுது போக்கு பூங்காவில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாசில்தார் கூறும்போது, ‘‘இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும். அதன் பிறகு தனிக்குழு அமைக்கப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர் முடிவு செய்வார்’’ என்றார்.
ராட்டினம் உடைந்து விழுந்த சம்பவம் காரணமாக பொழுது போக்கு பூங்கா நேற்று திறக்கப்படவில்லை. இது தெரியாமல் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் பூங்கா முன் திரண்டனர். அதன்பிறகு தகவல் அறிந்த அவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.