Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

ஜார்க்கண்டில் 59 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் பறிமுதல்


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த லோத்கர் மாவட்டத்தில் பைக்ரா வனப்பகுதியில் மாவட்ட போலீசாரும் எல்லை பாதுகாப்பு படையினரும் மாறுவேடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தலா 1 கிலோ எடையுள்ள 59 ‘டிபன் பாக்ஸ்’ வெடிகுண்டுகளை கண்டுபிடித்து கைப்பற்றினர்.

பின்னர் ராஞ்சியில் இருந்து நிபுணர்களை வரவழைத்து அந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவோயிஸ்டுகளின் 4 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு, 200 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக லோத்கர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.