பீகாரில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி. மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ். இவர் கடந்த 7-ம் தேதி பாதுகாவலருடன் கயாவில் காரில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு கார் முந்திச்சென்று உள்ளது. இதனை தொடர்ந்து முந்திச்சென்ற காரை மடக்கி அதில் இருந்த ஆதித்யா சச்தேவா என்ற வாலிபரை கடுமையாக தாக்கியுள்ளார். அவரை சுட்டுக் கொலை செய்து உள்ளார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ராக்கி யாதவ் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் ஆதித்யா சச்தேவா பிளஸ்-2 தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் எடுத்து வெற்றிப் பெற்றுள்ளார். ஏற்கனவே மகனை இழந்து வாடும் ஆதித்யாவின் பெற்றொருக்கு தேர்வு முடிவுகள் அவர்களின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது.
தன் மகன் தேர்வில் வெற்றி பெற்று இருப்பது குறித்து தந்தை சச்தேவா கூறுகையில் “என் மகன் தேர்வில் வெற்றிப் பெற்றுவிட்டான். ஆனால் வாழ்க்கை எனும் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டான். அவன் உயிரோடு இருந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.